புகைத்தலை கைவிட்ட சர்ச்சைக்குரிய இந்தோனேசிய சிறுவன்!

Read Time:1 Minute, 51 Second

இரண்டு வயதிலேயே சிகரெட் புகைக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உலகின் கவனத்தினை தன்பக்கம் ஈர்த்திருந்த இந்தோனேசிய சிறுவன் அப்பழக்கத்தை கைவிட்டுள்ளான்.

அட்லி ரியால் என்ற குறித்த குழந்தை தொடர்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவுகளில் அமைந்துள்ள பின் தங்கிய கிராமமொன்றைச் சேர்ந்த அட்லி ரியால் தொடர்பில் அக்காலப்பகுதியில் பரவலாக பேசப்பட்டது.

மேலும் இந்தோனேசியாவில் சிறுவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றமை தொடர்பில் அந்நாட்டு அரசின் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

அட்லி ரியாலின் தற்போதைய வயது 5, ஆனால் சிகரெட் புகைக்கும் பழக்கத்தை அவன் முற்றாக கைவிட்டுள்ளான்.

எனினும் தற்போது அவன் உணவுக்கு அடிமையாகியுள்ளதாக அவனது பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

தினசரி பெருந்தொகையான உணவை அவன் உண்டு வருவதாக அவனது பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால் அவனது நிறை வெகுவாக அதிகரித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

முன்னர் சிகரெட் கேட்டதைப் போல தற்போது உணவை கேட்டு வருவதாக அவனது தாயார் தெரிவித்துள்ளார்.

Smoking Toddler Grows Up

Previous post நிந்தவூரின் குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் கிழக்கு மாகாண சபையில் அவசர பிரேரணை!
Next post சவூதியிலிருந்து 1500 பேரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!