புகைப் பிடித்தலுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை பாராட்டத்தக்கது! - Sri Lanka Muslim

புகைப் பிடித்தலுக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கை பாராட்டத்தக்கது!

Contributors

புகை பிடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பிரதிபலிக்கும் புகைப்படங்களை சிகரட் பக்கட்டுகளில் ஜனவரி முதலாம் திகதி முதல் 70 வீதம் பிரசுரிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கதொரு முடிவாகும் என சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டிய விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக்  குறிப்பிட்டுள்ளார்.

புகைப்பிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயின் பாதிப்புகளைப் பிரதிபலிக்கும் புகைப்படங்களை சிக்ரட் பக்கட்டுகளில் 80 வீதம் பிரசுரிக்கப்படுவதை கட்டாயப்படுத்தும் விசேட வர்த்தமானி பிரகடனத்தை வெளியிட நாம் நடவடிக்கை எடுத்தோம். இதனை சகலரும் அறிவீர்கள். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக நீதி மன்றம் சென்றார்கள்.

ஆனால் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளும் சிகரட் பக்கெட்களில் புகைப்பிடித்தலால் ஏற்படும் பாதிப்புகளை 70 வீதம் ஜனவரி முதலாம் திகதி முதல் பிரசுரிப்பதற்கு முடிவு செய்துள்ளன. இது பெரிதும் வரவேற்கத்தக்க முடிவாகும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team