புதிதாக சவுதிக்கு வரும் தொழிலாளர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி - Sri Lanka Muslim

புதிதாக சவுதிக்கு வரும் தொழிலாளர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி

Contributors
author image

Editorial Team

புதிதாக சவுதிக்கு வரும் தொழிலாளர்களுக்கு அவர்களின் தொலைபேசியில் உபயோகிப்பதற்கு சவுதி தொழிலாளர் அமைச்சகத்தால் இலவசமாக SIM கார்டு கொடுக்கப்படுகின்றது.

அதில் சவுதிதொழிலாளர் உரிமை, கடமை, கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் சட்டபூர்வமான விழிப்புணர்வுகள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். மேலும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு இணைப்புகளும் குறிப்பிட்ட அளவிற்கு இலவசமாக கிடைக்கும்.

இதன் மூலம் தொழிலாளர்கள் அமைச்சகத்தையும், தூதரகத்தையும் தொடர்பு கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. உதவிக்கு 19911 என்ற இலவச எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

உதவிக்காக 24 மணிநேரமும் சேவையாற்றும் இந்த வசதி புதிதாக வரும் தொழிலாளிகளின் நலன் கருதி தொடங்கப்பட்டுள்ளதாகவும், ரியாத்தில் தொடங்கியுள்ள இந்த சேவை ஏனையப் பகுதிகளிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இதனை தொடங்கி வைத்த அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team