புதிதாக பள்ளிவாசல் திறந்து வைத்து பெருநாள் தொழுகையும், குத்பாவும் நடத்திய வர்த்தகர்..! - Sri Lanka Muslim

புதிதாக பள்ளிவாசல் திறந்து வைத்து பெருநாள் தொழுகையும், குத்பாவும் நடத்திய வர்த்தகர்..!

Contributors

நூருள் ஹுதா உமர்.

புதிதாக இன்று திறந்துவைக்கப்பட்ட இறக்காமம் கொக்கிலங்கால் பள்ளிவாசலில் புனித ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மௌலவி றாபி எஸ். மப்ராஸ் (நளிமி)யினால் நிகழ்த்தப்பட்டது.

எவ்வித அடிப்படை வசதிகளுமில்லாத இறக்காமம் கொக்கிலங்கால் பிரதேசத்திற்கு கடந்த மாதம் நிவாரணம் வழங்க சென்ற சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவரும், முபாரக் டெக்ஸ் குழும தலைவருமான எம்.எம். முபாரக் அந்த பிரதேச மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய குறுகிய நாட்கள் இடைவெளியில் கட்டிமுடிக்கப்பட்ட பள்ளிவாசலை ஹஜ்ஜுப்பெருநாள் தினமான இன்று முபாரக் டெக்ஸ் குழும தலைவர் எம்.எம். முபாரக் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து இடம்பெற்ற பெருநாள் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்ற குத்பா பிரசங்கத்தில் குடும்ப உறவு, இஸ்லாமிய மரபுகள், தியாகம், விட்டுக்கொடுப்பு, சமூக கடமைகள், வறுமை, இறைவனின் அருள், சோதனைகள் தொடர்பில் மௌலவி றாபி எஸ். மப்ராஸ் (நளிமி) யினால் விரிவான விளக்கம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய வர்த்தகர் எம்.எம். முபாரக், இரட்டிப்பு மகிழ்ச்சியான நாளாக இன்றைய நாள் இருப்பதாகவும், வசதி படைத்த நல்லுள்ளங்கள் தேவையுடைய மக்களுக்கு தமது நிதியை செலவிட முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team