'புதிய அமைச்சரவை; பொருளாதார நெருக்கடிக்கு மேலும் வழிவகுக்கும்' -வீரசுமண வீரசிங்க! - Sri Lanka Muslim

‘புதிய அமைச்சரவை; பொருளாதார நெருக்கடிக்கு மேலும் வழிவகுக்கும்’ -வீரசுமண வீரசிங்க!

Contributors

புதிய அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதன் மூலமே தற்போதைய நெருக்கடி நிலைமை மோசமடையும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான வீரசுமண வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினுள் இருந்து மற்றொரு குழு அமைச்சுப் பதவிகளை கைப்பற்றுவது மக்களை மேலும் கிளர்ச்சியடையச் செய்யும்.
அமைச்சுக்களை மாற்றுவதும் அமைச்சர்களை மாற்றுவதும் தற்போது மக்கள் கோரும் ஒன்றல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
தற்காலிக நடவடிக்கைகளை பொதுமக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும், எனவே பொதுமக்கள் தெரிவிக்கும் பிரச்சினைகளை அரசாங்கம் கேட்டு உரிய முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

Web Design by Srilanka Muslims Web Team