புதிய அரசாங்கத்திற்கு ஆதரவு – சஜித் அணியினர் தீர்மானம்..!

Read Time:1 Minute, 2 Second

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது.

பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முற்போக்கான தீர்மானத்திற்கே ஆதரவு என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அத்தோடு புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்காமல் பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக தமது பூரண ஆதரவை வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் டீல் பேச புதிய அரசாங்கம் முற்பட்டால் ஆதரவை மீளப்பெற்றுக் கொள்வோம் என்றும் எச்சரித்துள்ளது.

Previous post இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் மீண்டும் குழுமுகிறார்கள் – இந்திய உளவுத்துறை..!
Next post 9 ஆம் திகதி வன்முறை சம்பவங்கள் – பாதுகாப்பு செயலாளர் மீது குற்றஞ்சாட்டு..!