புதிய பிரதியமைச்சர்களில் சிறுபான்மையினத்தவர்கள் இல்லை - Sri Lanka Muslim

புதிய பிரதியமைச்சர்களில் சிறுபான்மையினத்தவர்கள் இல்லை

Contributors

 

(TM)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் சிறுபான்மையினத்தவர்களுக்கு இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வியாழக்கிழமை பிரதி அமைச்சர்களாக சத்திய பிரமாணம் செய்துகொண்டனர்.

எனினும், இந்த புதிய பிரதி அமைச்சர்கள் நியமனத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும்  பதவி வழங்கப்படவில்லை.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களான பி.திகாம்பரம், பிரபா கணேசன் மற்றும் அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்க்கப்படும் என தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில்  66 அமைச்சர்களும் இன்று புதிதாக நியமிக்கப்பட்ட பிரதியமைச்சர்கள் 9 பேர் அடங்களாக 38 அமைச்சர்களும் திட்டமிடல் அமைச்சர்கள் இருவரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கமாகும்.

இதில் சிறுபான்மையினத்தை சேர்ந்த அமைச்சர்கள் ஏழுபேரும், பிரதியமைச்சர்கள் ஐவரும் அங்கம் வகிக்கிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

Web Design by Srilanka Muslims Web Team