புதுத் தெளபா (கவிதை) » Sri Lanka Muslim

புதுத் தெளபா (கவிதை)

Contributors
author image

நன்றி - அனுப்புனர்

Mohamed Nizous


இரவில் செய்த பாவம்
இன்பொக்ஸ் சற்றில் செய்த பாவம்
பகலில் செய்த பாவம்
பாஸ்வேர்ட் திருடிய பாவம்
முன் செய்த பாவம்
முக நூலில் மோசமாய் போட்ட பாவம்
பின் செய்த பாவம்
பின் பின்னூட்டத்தில் பிதற்றிய பாவம்
ரகசியமாய்ச் செய்த பாவம்
ரவுட்டரை ஹெக் செய்த பாவம்
பரகசியமாய் செய்த பாவம்
பப்லிக் குரூப்பில் ஏசிய பாவம்
அறிந்து செய்த பாவம்
அண்ட்றொய்டில் செய்த பாவம்
அறியாமல் செய்த பாவம்
ஐ போணில் செய்த பாவம்
சிறிய பாவம்
சிம்மை மாற்றி செய்த பாவம்
பெரிய பாவம்
பேக் ஐடி திறந்து செய்த பாவம்
புதிய பாவம்
போண் பார்த்த பாவம்
பழைய பாவம்
படம் பார்த்த பாவம்
சொல்லால் செய்த பாவம்
சொந்தக் குரலை மாற்றி போட்ட பாவம்
செயலால் செய்த பாவம்
ஷெயார் செய்து செய்த பாவம்
ஊசாட்டத்தால் செய்த பாவம்
ஊர் பலாய் போஸ்ட் ரசித்த பாவம்
அடங்கலை விட்டும்..

எங்களை பாதுகாப்பாயாக – ஆமீன்

Web Design by Srilanka Muslims Web Team