புத்தர் சிலை மீது தாக்குதல் (படங்கள்) - Sri Lanka Muslim
Contributors

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

மட்டக்களப்பு,பிள்ளையாரடியில் தனியார் காணியொன்றில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை, இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டு வீசப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தர் சிலை கீழே வீசப்பட்டுக் கிடப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே  சேதமாக்கப்பட்ட சிலையின் பாகங்களை தாங்கள் மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பேழையிலிருந்து அது வெளியே எடுத்து வீசப்பட்டதில் சிலை பல பாகங்களாக நொருங்கியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிலையின் பாகங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் பௌத்த மக்கள் எவரும் இல்லாத போதிலும், போர் இடம்பெற்ற காலப்பகுதியில் அங்கு நிலை கொண்டு முகாமிட்டிருந்த படையினரும் பொலிஸாரும் குறித்த புத்தர் சிலையை அங்குள்ள தனியார் காணியொன்றில் வைத்து வழிபாட்டில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சம்பவம் குறித்து மட்டக்களப்புப் பொலிஸாரும் புலனாய்வுத் துறையினரும் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

 

Web Design by Srilanka Muslims Web Team