புத்தளத்தில் எரிவாயு ஆலையில் வெடி விபத்து - இருவர் ஆபத்தான நிலையில்..! - Sri Lanka Muslim

புத்தளத்தில் எரிவாயு ஆலையில் வெடி விபத்து – இருவர் ஆபத்தான நிலையில்..!

Contributors
author image

Editorial Team

புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்து நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயது மற்றும் 24 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது  வைத்தியசாலையில்  ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மோட்டார் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளைப் புதுப்பிக்கும் இடத்தில் குளிரூட்டலுக்கு பயன்படுத்தப்படும் 5 அடி உயர நைட்ரஜன் அடங்கிய சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த குழாயே வெடித்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team