புத்தளம் காட்டிலிருந்து கடிதங்கள் மீட்பு - Sri Lanka Muslim

புத்தளம் காட்டிலிருந்து கடிதங்கள் மீட்பு

Contributors

புத்தளம், கொட்டுகச்சி உப தபால் நிலையத்திலிருந்த பெருமளவிலான கடிதங்கள் அருகிலுள்ள காட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தபால் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்வதற்கு தபால்

திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கை தமக்கு நேற்று கிடைத்ததாகவும், அதன் பிரகாரம் செயற்படவுள்ளதாகவும் தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன தெரிவிக்கின்றார்.

புத்தளம் – கொட்டுகச்சி பகுதியில் தபால் உத்தியோகத்தர் ஒருவர் பொதுமக்களுக்கு விநியோகிப்பதற்காக வழங்கப்பட்ட ஒருதொகை கடிதங்களை எறிந்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தபால் மாஅதிபர் குறிப்பிடுகின்றார்.

இந்த சம்பவம் தொடர்பில், விசாரணை அதிகாரி ஒருவரை அந்தப் பகுதிக்கு அனுப்பி விசாரணைகளை முன்னெடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.

உத்தியோகத்தர் ஒருவர் தனது கடமைகளை முறையாக செய்யாவிடின், அவரை பணிநீக்கம் செய்வதே சட்ட ரீதியான நடவடிக்கை என சுட்டிக்காட்டிய தபால் மாஅதிபர், எதிர்காலத்தில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்ததன் பின்னர், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய உத்தியோகத்தர் மீது விரைவில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தற்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து வடமேல் மாகாண பிரதி தபால் மாஅதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தபால் மாஅதிபர் ரோஹன அபேரத்ன மேலும் தெரிவிக்கின்றார்.-சக்தி நியூஸ்

Web Design by Srilanka Muslims Web Team