புத்தளம் -மன்னார் நெடுஞ்சாலைக்கு போடப்படும் முட்டுக் கட்டைகள் - Sri Lanka Muslim

புத்தளம் -மன்னார் நெடுஞ்சாலைக்கு போடப்படும் முட்டுக் கட்டைகள்

Contributors

புத்தளம் முதல் மன்னார் வரை வீதி (நெடுஞ்சாலை) ஒன்றை வில்பத்து சரணாலயத்தின் ஊடாக அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த சரணாலயத்தின் ஊடாக புத்தளம் முதல் மன்னார் வரை நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது  இந்த வழக்கை  சிலர் தாக்கல் செய்ததாகத் தெரிகிறது.

இந்த வீதியை அமைப்பதற்கான முடிவு சுற்றாடல் விதிகளை மீறும் செயல் என இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்த மார்ச் மாதம் வரை வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இந்த வீதி புத்தளம் மற்றும் மன்னார் மக்களுக்கு பொருளாதார நோக்கில் மிகவும் பயனுள்ளது என்று சுட்டிக்காட்டப்படுகிறது . புத்தளத்திலிருந்து மன்னார்  வரைக்குமான வீதி –   புணரமைக்க ஏழாயிரத்து ஐந்நூறு மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் முன்னெடுக்கும்   நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  சட்ட ரீதில் போதிய பலமானதாக இல்லை என்றும் தெரிவிக்கப் படுகிறதுlm

Web Design by Srilanka Muslims Web Team