புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளை பார்வையிட பலர் வருகை தந்ததால் பெற்றோர்கள் வியப்பு - Sri Lanka Muslim

புற்று நோயால் பாதிக்கப்பட்ட மகளை பார்வையிட பலர் வருகை தந்ததால் பெற்றோர்கள் வியப்பு

Contributors

(தமிழில் ஏ.எம். அல்பிஸ்)

பல நூற்றுக் கணக்கான மக்கள் திறந்த வெளியிலிருந்து புற்று நோயால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானிய சிறுமியையும் மிக வறுமையில் வாடும் அவளுடைய பெற்றோருக்காகவும் பிரார்த்தனை செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் நடந்துள்ளது.

குமாலா அகமட் எனும் அச்சிறுமியின் மோசமான நிலையை கடந்த சில நாட்களாக அரேபியா செய்தி நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்துந்தது.

அச் சிறுமி தற்போது சவூதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். தொடர்ச்சியாக புற்று நோயின் வலியை தாங்கிக் கொண்டிருக்கும் இச் சிறுமிக்கு வலது கண்ணில் புற்று நோய் சத்திரசிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.

பல நூற்றுக் கணக்கான பாகிஸ்தானியர்கள் குறித்த சிறுமியின் தந்தையிடம் தொடர்பு கொண்டு அவர்களுடைய அனுதாபத்தையும் ஒருமைப்பாட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

பல ஜித்தா வாசிகள் தனது மகளை பார்வையிட வைத்தியசாலைக்கு சமுகளித்தது தங்களுக்கு ஆச்சரியமாக இருப்பதாக குறித்த சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

றியாத்தில் உள்ள சில சவூதி மருத்துவர்கள் தாங்கள் மகளுக்கு உதவ முன்வரலாமா என வினவியதாக குறித்த சிறுமியின் தகப்பனார் மேலும் தெரிவித்தார்.

இச் சிறுமியின் சத்திரிகைச் சிகிச்சைக்கு பண உதவி செய்ய யாராவது முன்வந்தால் சவூதி அரேபியாவின் தூதுவராலயத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team