புற்று நோய் காதலனை மரணத்தைத் தழுவ சில மணித்தியாலங்களுக்கு முன் கரம் பிடித்த காதலி - Sri Lanka Muslim

புற்று நோய் காதலனை மரணத்தைத் தழுவ சில மணித்தியாலங்களுக்கு முன் கரம் பிடித்த காதலி

Contributors

பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்த 29 வயதான ரோவ்டேன் கோ பென்கோகா (Rowden Go Pangcoga) தீவிர 4 ஆம் கட்ட சிறுநீரகப் புற்று நோய்க்கு உட்பட்டிருப்பதாக கடந்த மே மாத வைத்திய அறிக்கையில் பரிசோதனைகளின் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

 

ரோவ்டேன் மரணிக்கக சில மணித்தியாலங்களுக்கு முன்னர் தனது காதலியுடன் திருமணம் செய்ய விரும்ம்பினார்.அதன்படி 12 மணித்தியாலங்களுக்குள் திருமண ஏற்பாடுகளை மணிலா வைத்தியசாலையின் உள்ளே ஏற்பாடு செய்யப்பட்டது.

 
தனது காதலன் மரணிப்பது தெரிந்தும் காதலி Leizl தனது சம்மதத்தை தெரிவித்ததோடு சாதாரண திருமண அலங்காரத்துடன் காதலனை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் தங்களது திருமனத்த ஜூலை மாதம் நடத்தத் திட்டமிட்டிருந்தபோதும் இம் மாதம் இத் திருமணம் நடைபெற்றதுடன் 10 மணித்தியாலங்களின் புற்று நோய்க்கெதிரான போராட்டத்தின் பின்னர் ரோவ்டேன் இயற்கையெய்தினார்.

 

உணர்வுபூர்வமாக  ஒளிப்பதிவு செய்யப்பட இவர்களது திருமண ஒளிப்பதிவை Rowden இன் சகோதரன் Hasset  ஜூன் 18 you tube இல்  ‘like a heartbreaking fairytale’எனும் தலைப்பில் பதிவேற்றம் செய்தார்.பதிவேற்றம் செய்த்திலிருந்து 4 மில்லியன் மக்கள் இவ் ஒளிப்பதிவை பார்வையிட்டுள்ளனர்.

 

Hasset கருத்துத் தெரிவிக்கையில் தனது சகோதரனது கனவு நிறைவேறியதாகவும்,இத் திருமணம் நிகழ்வதற்கு உதவிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு நன்றி கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். 

Web Design by Srilanka Muslims Web Team