புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்: பந்துல - Sri Lanka Muslim

புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்: பந்துல

Contributors

தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் பெரும் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தரம்-5 புலமைப் பரீட்சை பரீட்சையானது மாணவர்களுக்கு பெரும் சுமையாகிவிட்டது என்பதில் அமைச்சர்கள், அதிகாரிகளிடையே கருத்து வேறுபாடில்லையென்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த சர்ச்சைக்குரிய புலமைப்பரிசில் பரீட்சையை உடனடியாக கைவிடவேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

புலமைப்பரிசில் பரீட்சையினால் ஒரு சிறு தொகையினர் மட்டுமே நன்மையடைகின்றனர் என்றும் பெருந்தொகையானோர் விரக்தி அடைகின்றனர் எனவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க கூறினார்.

மாணவர்களின் உணர்வுகளை நோகடிக்காமல் இருப்பதற்காக, அபிவிருத்தியடைந்த நாடுகளில் கீழ் வருப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு அறிக்கையில் புள்ளிகள் காட்டப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.

5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையை கைவிடக்கோரும் வேண்டுகோளை உத்தியோகபூர்வமாக சகல பங்குதாரருக்கும் விடுக்கவுள்ளதாக அவர் கூறினார்.tm

Web Design by Srilanka Muslims Web Team