புலம்பும் மைக்கேல் கிளார்க் - Sri Lanka Muslim
Contributors

அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவரான மைக்கேல் கிளார்க் டி.ஆர்.எஸ் முறை சந்தேகம் தரும் வகையில் உள்ளது என தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐ.சி.சி.,) சார்பில் நடக்கும் போட்டித் தொடர்களில் டி.ஆர்.எஸ் முறை பயன்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆஷஸ் தொடரில், டி.ஆர்.எஸ் முறையில் வழங்கப்பட்ட பல தீர்ப்புகள் சர்ச்சையை கிளப்பின.

இதனால், இப்போது பல அணிகள் டி.ஆர்.எஸ்., குறித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இவ்வரிசையில் இணைந்துள்ளார் மைக்கேல் கிளார்க்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட், பேட்டில் பந்து பட்டது தெளிவாகத் தெரிந்தது.

அவரை எல்.பி.டபிள்யு முறையில் வெளியேற்றி இருக்க வேண்டும்.

இதற்கு அம்பயர்கள் அவுட் தரவில்லையெனில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உறுதி செய்திருக்க வேண்டும்.

அணித்தலைவர் என்ற முறையில், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சரியான முடிவுகளை பெறவேண்டும் என்று தான் நானும் விரும்புகிறேன்.

இதை விட்டுவிட்டு எத்தனை அப்பீல் வாய்ப்புகள் உள்ளன அல்லது இல்லை என்று பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

ஒருவேளை தொழில்நுட்பம் சரியில்லை எனில், இதை பயன்படுத்தக் கூடாது. ஹாட் ஸ்பாட் முறையை உருவாக்கிய வாரன் பிரென்னன் கூட, அனைத்தையும் கண்டுபிடிக்க முடியாது என்பதை ஒத்துக் கொண்டுள்ளார்.

இதனால், முழுமையான நம்பிக்கை வரும் வரை இம்முறையை நிறுத்தி வைக்க வேண்டும என தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team