புலிகளுடன் தொடர்பை வைத்திருப்பது நாங்களல்ல நீங்கள்தான் – சம்பந்தன்

Read Time:2 Minute, 8 Second

முன்னாள் புலிகளுக்கு  ஆதரவு வழங்கி பதவிகளை வழங்கி அரசாங்கமே விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று குற்றம் சுமத்தியுள்ளது.

 

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், கூட்டமைப்பு விடுதலைப்பு புலிகளை ஆதரிக்கவில்லை. அவர்களுடன் இணைந்து பணியாற்றியது. ஆனால் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை பெற்று கொள்ளும் விடயத்தில் அவர்களுடன் ஆர்வமாக இணைந்து செயற்பட்டது.

குமரன் பத்மநாதன், பிரதியமைச்சர் முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆகியோரும் முன்னாள் போராளிகள். அரசாங்கமும் அவர்களும் நேரடியாக இணைந்து பணியாற்றிய வருகின்றனர்.

நான் விடுதலைப் புலிகளுடன் எதனையும் செய்யவில்லை. அரசாங்கம் அவர்களுடன் நிறையவற்றை செய்துள்ளது. எங்கள் மீது கல்லெறிய வேண்டாம். நாங்கள் விடுதலைப் புலிகளுடன் எதனையும் செய்யவில்லை.

அரசியல் தீர்வை கொண்டு வரும் தேவையில் நாங்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றினோம். இதற்காக அவர்களுடன் பணியாற்றும் தேவை இருந்தது.

அண்மைய மாகாண சபைத் தேர்தலிலும் தேர்தலுக்கு பின்னரும் வடக்கில் சில இராணுவ நடவடிக்கைகள் கவலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இராணுவத்தில் சிறந்த சிப்பாய்களும் உள்ளனர். அத்துடன் அவர்களில் கூடாதவர்களும் உள்ளனர். இந்த விடயம் தீர்க்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார் .

Previous post மனிதனை விட நாய்களுக்கு கூடிய சலுகைகள் வழங்க வேண்டும்! பிரதமர்
Next post சட்டக்கல்லூரி முறைக்கேடுகள் குறித்து விசாரணை நடப்பதாக தகவல்