புல்மோட்டையில் பதற்றம்; முஸ்லிம்களின் காணிகளில் கடற்படையினர் ஆதிக்கம் - Sri Lanka Muslim

புல்மோட்டையில் பதற்றம்; முஸ்லிம்களின் காணிகளில் கடற்படையினர் ஆதிக்கம்

Contributors

 

-மா.ச.உறுப்பினரின் ஊடகப்பிரிவு-

புல்மோட்டை பட்டிக்குடா பிரதேசத்தில் மீண்டும் கடற்படையினர் காணி அபகிரிக்கும் முயற்சி மக்கள் பதற்றம்.

இன்று வெள்ளிக்கிழமை (2013.12.20) புல்மோட்டை பட்டிக்குடா பிரதேசத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை உள்ளடக்கி கடற்படைக்கு சொந்தமான பகுதி என்று பெயர்ப்பலகை இட்டதுடன் அப்பிரதேசத்தில் தோட்டம் செய்த அங்கு வசித்து வந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு அவர்கள் வசித்து வந்த கொட்டில்களை சிதைவடையச் செய்தது மட்டுமல்லாமல் தோட்டங்களை பாதுகாப்பதற்காக அடைக்கப்பட்டிருந்த வேலிகளையும் அகற்றியுள்ளனர். இவ்வாறான நடவடிக்ககை மூலம் முற்றாக பயிர்கள் சேதமடைந்துள்ளது மட்டுமல்லாமல் பொது மக்கள் பதற்றமடைந்துள்ளனர்.

இதன் பின்னர் புல்மோட்டை கடற்படையினரின் முறைப்பாட்டிற்கிணங்க குச்சவெளி உதவி பிரதேச செயலாளர்,மாகாண காணி ஆணையாளர், வன ஜீவராசிகள் சரணாலய அதிகாரிகள், வன பரிபாலன அதிகாரகாரிகள், புல்மோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கடற்படை உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவையாளர் உள்ளிட்ட பலர் அங்கு விஜயம் செய்து அங்குள்ள நிலமைகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன்போது சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த அப்பிரதேசத்தை பிரதிநிதித்து வப்படுத்துகின்ற  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் பட்டிக்குடா பிரதேச காணிகளின் நிலைமைகள் குறித்து தெளிவாக எடுத்துக் கூறிய அதேவேளை அங்கு கடந்த முப்பது வருட காலத்திற்கு முன்னர் மக்கள் அங்கு வசித்து வந்ததாகவும் அவர்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து  தற்போது தங்கள் சொந்த நிலங்களில் மீண்டும் சென்று துப்பரவு செய்து தோட்டங்கள் செய்து வருகின்ற சந்தர்ப்பத்திலேதான் இவ்வாறான நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. அத்துடன் கடற்படை முகாம் அமைப்பதற்கு ஏற்கெனவே பொது மக்கள் தோட்டம் செய்து வந்தவர்களை வெளியேற்றிவிட்டு கடற்படையினருக்கு காணி வழங்கப்பட்டது.

அதற்கு மேலதிகமாக 193 ஏக்கர் தேவை என பிரதேச செயலாளர் ஊடாக கிழக்கு மாகாண காணி பகிர்ந்தளிப்பு குழுவுக்கு விண்ணப்பம் செய்துள்ளனர் ஆனால் இதுவரை அதற்கான அனுமதி பெறப்படவில்லை.  அவ்வாறு அனுமதி பெறுவதற்கு முன்னர் அவர்கள் 500ஏக்கருக் மேற்பட்ட காணிகளைச்சுற்றி பெயர்ப்பலகையிடும் நடவடிக்கையே தற்போது செய்து வருகின்றனர் இதன் காரணமாகவே மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஆகவே இதன் யதார்த நிலமையை சரியாக உணர்ந்து இதற்கான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் உதவிக்காணி ஆணையாளரால் கடற்படைனரால் சேதமாக்கப்பட்ட கொட்டிலையும் பாதுகாப்பு வேலியினையும் 2013.12.25ம் திகதிக்கு முன்னர் அக்காணிக்குரியவரிடம் அகற்றுமாறு வேண்டப்பட்டுள்ளது.

காணிக்குரியவர் ஏற்கெனவே காணி அனுமதிப்பத்திரத்துக்காக விண்ணப்பித்துள்ளார் என்பதுடன் அங்குள்ள மக்கள் தங்களது அன்றாட ஜீவனோபாயத்தை தோட்டங்கள் மற்றும் கடலை நம்பியவர்களாகவே காணப்படுகின்றர்.

 

 

Web Design by Srilanka Muslims Web Team