பூகொடையூர் அஸ்மா பேகத்தின் "செங்குருதியும் பச்சோந்தியும்" நூல் வெளியீட்டு விழா » Sri Lanka Muslim

பூகொடையூர் அஸ்மா பேகத்தின் “செங்குருதியும் பச்சோந்தியும்” நூல் வெளியீட்டு விழா

Contributors
author image

A.S.M. Javid

பூகொடையூர் ஆசிரியர் அஸ்மா பேகம் எழுதிய செங்குருதியும் பச்சோந்தியும் எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவினை புரவலர் புத்தகப் பூங்hவின் ஏற்பாட்டில் அதன் 36வது வெளியீடாக கடந்த சனிக்கிழமை (07) கம்பஹா குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இலக்கியப் புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் எம்.எம்.எம். ஸர்ஜூன் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் தலைமை உரையை முன்னாள் அதிபர் எம்.எம்.எம். ஸர்ஜூன் வழங்கியதுடன் வரவேற்புரையை பிரதி அதிபர் எம்.ஆர்.எம். இர்ஷாதும் கருத்துரைகளை சமூகஜோதி ரபீக்கும், சுயாதீன தொலைக் காட்சியின் செய்தி ஆசிரியர் சித்தீக் ஹனிபாவும், சிறப்புரையை மேமன்கவியும் வழங்கியதுடன் ஏற்புரையையும், நன்றியுரையையும் நூலாசிரியர் எம்.என். அஸ்மா பேகம் நிகழ்த்தினார்.

நூலின் முதற்பிரதியை பூகொடை லக்கி ஹோல்ட் ஹவுஸ் உரிமையாளர் எல்.ஐ.ஏ.எம்.ஸப்வானும் சிறப்புப் பிரதிகளை ரூபவாஹினி செய்தி வாசிப்பாளர் இர்ஷாத் ஏ காதர் உள்ளிட்ட ஏனையோரும் புரவலர் ஹாசிம் உமரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

 

1 11  121 321 589 741 951 1452 2563 147852

Web Design by Srilanka Muslims Web Team