பெயர் மாற்றப்பட்ட துருக்கி - ஐ.நா ஒப்புதல்! - Sri Lanka Muslim

பெயர் மாற்றப்பட்ட துருக்கி – ஐ.நா ஒப்புதல்!

Contributors

துருக்கி நாட்டின் பெயர் “துர்க்கியே” என்று பெயர் மாற்றம் செய்யபப்பட்டுள்ளது.

துருக்கி அரசாங்கத்தின் கோரிக்கையை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையில் அந்த நாட்டின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

துருக்கி நாட்டின் பெயரை “துர்க்கியே” என மாற்றம் செய்யக்கோரி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துருக்கி அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டது.

சர்வதேச அளவில் நாட்டின் மதிப்பை அங்கீகரிக்கப்படுத்த தேசத்தின் பெயரை “துர்க்கியே” என பெயர் மாற்றி, அந்த நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் அறிவித்தார்.

இது குறித்து அவர் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், ” ‘துருக்கி’ மற்றும் ‘துர்க்கி’ போன்ற சொற்களுக்குப் பதிலாக ‘துர்க்கியே’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து நான் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என கூறி இருந்தார்.

ஐ.நா-வின் ஒப்புதலுக்கு துருக்கி காத்திருந்த நிலையில், தற்போது துருக்கியின் பெயர் மாற்ற கோரிக்கைக்கு ஐ.நா ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி துருக்கி என்ற பெயர் இனி “துர்க்கியே” என வழங்கப்படும் என ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரஸின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team