பெரும் ஆபத்தில் மட்டக்களப்பு வாவி! - Sri Lanka Muslim
Contributors

இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவி, பெருகிவரும் ஆற்றுவாழைத் தாவரங்களால் அழிவடைந்து வருவதுடன்,  மீனவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் குறித்த வாவியில் மீன்கள் பாடலிசைத்ததால், “பாடும் மீன்கள் வாழும் வாவி” என குறித்த வாவி சர்வதேச புகழ் பெற்றது.

மட்டக்களப்பு வாவியில் சுமார் 15 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. தற்போது ஆற்றுவாழைத் தாவரங்களின் பெருக்கத்தால் தோணிகளைத் தள்ள முடியாமல் மீனவர்கள் அவதியுறுகின்றனர்.

எனவே, வாவியை அழித்துவரும் ஆற்றுவாழைகளை உடனடியாக அகற்றித்தருமாறு, மீனவர்கள் கோரிக்கை விடுக்கினறனர்.

Web Design by Srilanka Muslims Web Team