பெற்றோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு! - Sri Lanka Muslim
Contributors

சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லீற்றருக்கு 30 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, புதிய விலை 400 ரூபா என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சிபெட்கோ ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து லங்கா ஐஓசி நிறுவனமும் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, சிபெட்கோ நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைவாக பெற்றோல் விலையை 30 ரூபாவினால் அதிகரிப்பதற்கு, லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தற்போது ஒக்டேன் 92 ரக பெற்றோலின் புதிய விலை 400 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team