பெளத்த சாச­னத்­திற்கு விரோ­த­மான கசினோ சூதாட்ட விடு­தி­க­ளையும் நாம் முற்­று­கை­யிட எங்­க­ளுடன் பொது­ப­ல­சேனா அமைப்பு இணை­யுமா? சமகி அமைப்பு சவால் - Sri Lanka Muslim

பெளத்த சாச­னத்­திற்கு விரோ­த­மான கசினோ சூதாட்ட விடு­தி­க­ளையும் நாம் முற்­று­கை­யிட எங்­க­ளுடன் பொது­ப­ல­சேனா அமைப்பு இணை­யுமா? சமகி அமைப்பு சவால்

Contributors

பெளத்த சாச­னத்­திற்கு விரோ­த­மான அனைத்து கசினோ சூதாட்ட விடு­தி­க­ளையும் நாம் முற்­று­கை­யிட முனைந்தால் எங்­க­ளுடன் பொது­ப­ல­சேனா அமைப்பு இணை­யுமா? என பகி­ரங்­க­மாக சமகி அமைப்பு சவால் விடுத்­துள்­ளது.

பெளத்த சாச­னத்­திற்கு விரோ­த­மான கசினோ சூதாட்­டத்தை பொது­ப­ல­சேனா நிரா­க­ரிக்­கு­மே­யானால் உட­ன­டி­யாக மேற்­படி சவா­லுக்கு பதி­ல­ளிக்க வேண்டும். கசினோ சூதாட்­டத்­திற்­காக எல்­லோரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்­டு­மெ­னவும் அவ்­வ­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.

 

தேசிய ஊழியர் சங்­கத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சமகி அமைப்பின் ஏற்­பாட்­டா­ள­ரு­மான தினேஷ் தொடங்­கொட இவ்­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

 

தர்­ம­சக்­க­ரத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி ஆட்சி பீட­மே­றிய மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்­க­மா­னது இந்த நாட்டின் கலா­சா­ரத்­தையும் பாரம்­ப­ரி­யத்­தையும் மாத்­தி­ர­மின்றி பெளத்த சாச­னத்­தையே இழி­விற்கு உட்­ப­டுத்தும் வகையில் இலங்­கையில் கசினோ சூதாட்ட நிலை­யங்­களை அர­சாங்கம் ஆரம்­பித்து வரு­கி­றது. குறிப்­பாக கொழும்பின் நகரப் பகு­தி­களில் கசினோ சூதாட்ட நிலை­யங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­துடன் வர­லாற்று புகழ்­மிக்க கண்டி, அநு­ரா­த­புரம் மற்றும் பொல­ந­றுவை ஆகிய மாவட்­டங்­க­ளிலும் கசினோ சூதாட்ட நிலை­யங்கள் ஆரம்­பிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

சூதாட்ட மன்னன் ஜேம்ஸ் பெக்­கரின் கசினோ சூதாட்­ட­மா­னது நாட்டின் கறுப்புப் பணத்தை வெள்­ளை­யாக்கும் ஒரு சூட்­சும விளை­யாட்­டாகும். எனவே, பெக்­கரின் சூதாட்­டத்­தினால் மது, மாது மற்றும் கலா­சார ரீதி­யான சீர­ழி­வுகள் இடம்­பெற வாய்ப்­புள்­ளது. இச் சூதாட்­டத்­தினால் விப­சா­ரி­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­து­விடும். புத்­த­பெ­ரு­மானார் பாவச் செயற்­பாட்டின் வாச­லாக சூதாட்­டத்தை குறிப்­பிட்­டுள்ளார்.

ஜேம்ஸ் பெக்­கரின் சூதாட்­டத்­தினால் கலா­சார விழு­மி­யங்­க­ளுடன் கூடிய எமது நாடு நாச­மாகி விடும். அத்­துடன் 1993 ஆம் ஆண்டு சூதாட்­டத்­திற்கு எதி­ராக அதி­க­ளவில் பாரா­ளு­மன்றில் குரல் கொடுத்­த­வ­ராக ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையே குறிப்­பிட முடியும். அவரே தன­து­ரையில் எமது கலா­சா­ரத்தை சீர­ழிக்கும் செயற்­பாடே சூதாட்­ட­மாகும் என கூறி­யுள்ளார்.

 

எனவே, ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ நினைத்தால் கசினோ சூதாட்ட சட்ட மூலத்தை கிழித்­தெ­றிய முடியும். இந்­நி­லையில் நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள அனைத்து கசினோ விடு­தி­க­ளையும் முற்­று­கை­யி­டு­வ­தற்கு நாங்கள் தீர்­மா­னித்­துள்ளோம். இந்­நி­லையில் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்பு எங்­க­ளுடன் முரண்­பட்டு காணப்­பட்ட பொது­ப­ல­சேனா அமைப்­பிற்கும் பகி­ரங்­க­மாக அழைப்பு விடுக்­கின்றோம். பெளத்த சாச­னத்தை சீர­ழி­விற்­குட்­ப­டுத்தும் கசினோ சூதாட்ட நிலை­யங்­களை முற்­று­கை­யி­டு­வ­தற்கு எங்­க­ளுடன் இணைய முடி­யுமா? முடி­யாதா, இச் சவா­லுக்கு உட­ன­டி­யாக பொது­ப­ல­சேனா பதி­ல­ளிக்க வேண்டும். இதற்­கி­ணங்க பொது­ப­ல­சேனா அமைப்­பிற்கு மாத்­தி­ர­மின்றி அனைத்து பெளத்த அமைப்­பிற்கும் அழைப்பு விடுக்­கிறோம்.

இதே­வேளை, பொதுநலவாய மாநாட் டின்போது இலங்கையில் பிரபல வர்த்தகர்கள் இருக்கத்தக்க சூதாட்ட மன் னன் ஜேம்ஸ் பெக்கரிற்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கியமையானது இலங்கை யின் வர்த்தகர்களை புறந்தள்ளும் செயற்பா டாகும்.

எனவே, சூதாட்ட சட்ட மூலத்தை கிழித்தெறிவதுடன் கசினோ சூதாட்ட விடுதிகளை அரசு உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

 

Web Design by Srilanka Muslims Web Team