பெளத்த சாசன அமைச்சரை மாற்று மதமாற்ற தடைச்சட்டத்தை நிறைவேற்று: BBS - Sri Lanka Muslim

பெளத்த சாசன அமைச்சரை மாற்று மதமாற்ற தடைச்சட்டத்தை நிறைவேற்று: BBS

Contributors

தர்மபால மாவத்தையில் உள்ள பெளத்த  சாசன அமைச்சை பொதுபல சேனா கடும்போக்கு அமைப்பு ஏற்கனவே அறிவித்ததன் பிரகாரம் இன்று முற்பகல் முற்றுகையிட்டுள்ளது

பௌத்தசா­சன அமைச்­சரை மாற்­று­மாறும், அமைச்சில் உள்ள பணிகளை சரியாக செய்ய முடியாது சகலரும் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் மத­மாற்ற தடைச்­சட்­டத்தை உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­மாறும் கூறி பொது பல­சேனா அமைப்பின் பௌத்த தேரர்கள்  அமைச்சிக்கு வெளியில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அமைச்சின் செயலாளர் வெளியில் வந்து பிக்குமாரை அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்  அங்கு தேரர்கள்  வெளியில் இருந்து  பிரித் ஓதியுள்ளனர் ,  அங்கு பொலிஸார்  வாயலை மூடி நிறுத்தப்பட்டிருந்தனர்.

நாட்­டுக்குள் கிறிஸ்­தவ, முஸ்லிம் அடிப்­ப­டை­வாத சக்­தி­களின் கைங்­க­ரி­யங்கள் அதி­க­ரித்து பெளத்­தர்கள், இந்­துக்கள் பலாத்­கா­ர­மாக மத­மாற்றம் செய்­யப்­ப­டு­கின்­றனர். என்றும்

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என பொதுபல சேனா கடும்போக்கு அமைப்பு தெரிவித்துள்ளது

இதன் பின்னர் தொல் பொருள் திணைக்கள ஆணையாளர் நாயகத்தை சந்திக்க சென்ற பொதுபல சேனாவை ஆணையாளர் சந்திக்கவில்லை என்பதால் அங்கு பெரும் அமளி ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கிறது .-TC

Web Design by Srilanka Muslims Web Team