பேசி எட்டப்படும் தீர்மானமே வடகிழக்கு முஸ்லிம்களுக்கான நிரந்தர தீர்வாகும் - துரைராஜ சிங்கம் (video) » Sri Lanka Muslim

பேசி எட்டப்படும் தீர்மானமே வடகிழக்கு முஸ்லிம்களுக்கான நிரந்தர தீர்வாகும் – துரைராஜ சிங்கம் (video)

th66

Contributors
author image

Editorial Team

வீடியோ – தமிழரசுக் கட்சியின் செயலாளரின்கருத்து:- 

முஸ்லிம், தமிழ் சமூகத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளும், புத்தி ஜீவிகளும் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசி எடுக்கின்ற தீர்மானமே இந்த நாட்டில் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வடகிழக்கில் பூர்வீகமாக வாழ்ந்த சிறுபான்மை இனமான முஸ்லிம் சமூகத்தினுடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் நிரந்த தீர்வாக அமையும் என தமிழரசுக் கட்சியின் செயலாளரும், கிழக்கு மாகாண சபையின் விவசாய, கால்நடை அபிவிருத்தி அமைச்சரும், சிரேஷ்ட்ட சட்டத்தரணியுமான துரைராஜ சிங்கம் தெரிவித்தார்.

சமகால அரசியலில் முக்கிய பேசு பொருளாக இருக்கின்ற பிரிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்பட்டால் பாதிக்கப்பட்டுள்ள சிறுபன்மை சமூகமான முஸ்லிம் சமூகம் இழந்துள்ள பூர்வீக காணிகள் மற்றும் தனித்துவ அடையாளங்கள், முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு, சுய நிர்ணய உரிமைகள், தங்களுக்கான பிராந்திய நிருவாக அலகுகள் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தமிழரசுக் கட்சியும், அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஏனைய இதர பங்காளி கட்சிகளின் பங்களிப்புடன் அமைச்சர் துரைராஜ சிங்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கே மேற்கண்டவாறு தமிழரசுக்கட்சியின் செயலாளர் பதிலளித்துள்ளார்.

தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் சிறுபான்மை சமூகமான வடகிழக்கு முஸ்லிம்களினுடைய பிரச்சனைகளை நிதானமாக முற்போக்கு சிந்தனையுடன் கையாளுவது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் யுத்தகாலங்களில் எதிர்கொண்ட ஆறாத வடுக்களாக இருக்கும் சம்பவங்களை நடு நிலையாக சிந்தித்து, முஸ்லிம்களினுடைய பிரச்சனைகளை உள்வாங்கி, முஸ்லிம் தலைமைகளோடும், அவர்களை பிரதி நித்தித்துவப்படுத்தும் புத்தி ஜீவிகளோடும் கலந்துரையாடி எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் வடகிழக்கில் சிறுபான்மை இனமாக வாழுகின்ற முஸ்லிம்களும் சுய கெளரவத்தோடு அதிகார பங்கீடுகளுடன் வாழ வேண்டும் என நினைக்கும் அசல் (Genuine) அரசியல்வாதியாக துரைராஜ சிங்கம் எல்லா சமூகத்தினாலும் மதிக்கப்படுகின்ற, பார்க்கப்படுகின்ற அரசியல்வாதியாக இருக்கின்றார்.

அந்த வகையிலே வடகிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம்களினுடைய பிரச்சனைகள் சம்பந்தமாகவும், வடகிழக்கு இணைக்கப்பட்டால் அதில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகும் பிரச்சனைகள் எவ்வாறு தமிழ் தலைமகளினால் தீர்த்து வைக்கப்பட இருக்கின்றது என்பது சம்பந்தமாக தமிழரசுக் கட்சியின் செயலாளரிடம் கேட்கப்பட்ட கேள்ள்விகளுக்கு அவரினால் வழங்கப்பட்ட விரிவான பதில்கள் அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Design by The Design Lanka