பேராசிரியர் தேரர் ராகுல பாக்கீர் மார்காரின் அரசியல் வாழ்வு பற்றிய நூல் எழுதியுள்ளார் - Sri Lanka Muslim

பேராசிரியர் தேரர் ராகுல பாக்கீர் மார்காரின் அரசியல் வாழ்வு பற்றிய நூல் எழுதியுள்ளார்

Contributors

அஸ்ரப் ஏ சமத்: முன்னாள் சபாநயாகரும் ஆளுநருமான தேசமாண்ய பாக்கீர் மார்கார் அரசியல் வாழ்வு பற்றிய சிங்களமொழி முலமான “வெதகெதர விபல்ய” எனும் 272 பக்கங்கள் கொண்ட நூல் நூல்  நேற்று கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது.

இந்த  நூலை பேராதனைப் பல்கழைக்கழகத்தின்  பேராசிரியர் தேரர்  ராகுல என்பவர் ஆக்கியுள்ளார்.

பிரதம அதிதியாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்து கொண்டார்.  முன்னாள் அமைச்சர்  கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு, ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆளுனர் அலவி மௌலானா லங்காதீப பத்திரிகை ஆசிரியர் சிறில் ரணசிங்க ஆகியோரும் பிரதான மேடையில் அமர்ந்திருந்தனர்.

இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், பாரளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், உறவினர்கள் பேருவளை பிரதேசவாசிகள் பொதுமக்கள் ஆகியோர்   கலந்து கொண்டானா;.

31s4

 

31s5

Web Design by Srilanka Muslims Web Team