பேலியகொட பகுதியில் கடும் மோதல் - ஒருவர் பலி! - Sri Lanka Muslim

பேலியகொட பகுதியில் கடும் மோதல் – ஒருவர் பலி!

Contributors

கொழும்பின் புறநகர் பகுதியான பேலியகொடயில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.

பெத்தியகொட பிரதேசத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நீண்ட காலமாக நிலவி வந்த கருத்து முரண்பாடு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கூரிய ஆயுதங்கள் மற்றும் தடிகளினால் அவர்கள் தாக்கப்பட்டதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்களில் மூவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், மேலும் இருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

Web Design by Srilanka Muslims Web Team