பேஸ்புக் காதலனிடம் கற்பை இழந்து தூக்கில் தொங்கிய சிறுமி - Sri Lanka Muslim

பேஸ்புக் காதலனிடம் கற்பை இழந்து தூக்கில் தொங்கிய சிறுமி

Contributors

பெங்களூரில் பேஸ்புக் மூலம் கிடைத்த காதலன் ஏமாற்றிவிட்டதால் பள்ளி மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர் ராணி(14). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த செப்டம்பர் மாதம் பேஸ்புக் மூலம் மனோஜ் குமார் என்பவருடன் நட்பானார்.

மனோஜ் குமார் ஏலஹன்காவில் உள்ள சோஷாத்ரிபுரம் கல்லூரியில் பி.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து பேஸ்புக் மூலம் குமாருடன் பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு நாள் குமார் அழைத்ததின்பேரில் நந்தினி லேஅவுட்டில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு ராணி சென்றுள்ளார்.

அங்கு குமார் ராணியை கட்டாயப்படுத்தி உறவு கொண்டுள்ளார். அதன் பிறகு ராணியிடம் அவரது தோழிகளின் விவரம், கைப்பேசி எண்கள், பேஸ்புக் கணக்கு பற்றி கேட்டு வந்துள்ளார்.

இதனால் ராணிக்கு சந்தேகம் வந்துள்ளது. இத்தனை விவகாரங்கள் நடந்ததும் ராணியின் பெற்றோருக்கு தெரியாது.

இந்நிலையில் ராணி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு குமாரிடம் கேட்க, அவரோ நான் இது எல்லாம் ஒரு ஜாலிக்காக செய்தேன் என்று கூறி நழுவிவிட்டார்.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவரது தாய் பணி முடிந்து நேற்று இரவு வீடு திரும்பியபோது கதவு உட்புறமாக பூட்டியிருந்தது.

இதனைத் தொடர்ந்து கதவை உடைத்து பார்த்தபோது ராணி தூக்கில் பிணமாகத் தொங்கினார்.

இதுகுறித்து ராணியின் பெற்றோர் பொலிசில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து குமார் மீது வழக்குப் பதிவு செய்த கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் மீது பாலியல் பலாத்காரம் மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையில் சாகும் முன்பு ராணி எழுதிய கடிதத்தில், மனோஜ் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் வேதனையாக உள்ளது.

நான் சந்தித்து காதலில் விழுந்து 2 மாதங்கள் தான் ஆகின்றன. எல்லாம் நன்றாக சென்றது. நான் அவருக்காக அனைத்தையும் தியாகம் செய்தேன். அவர் என்னுடன் உறவு வைத்துக் கொண்டார்.

ஆனால் தற்போது அனைத்தும் ஒரு ஜாலிக்காக செய்தேன் என்கிறார். அவர் எப்படி இப்படி செய்யலாம்? என் வாழ்க்கை கெட்டுவிட்டது என்றும் எனக்கு வாழ பிடிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team