"போதைப்­பொருள் பாவ­னையில் முஸ்லிம்களே அதிகளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்" - விதுர விக்­கி­ர­ம­நா­யக்க! - Sri Lanka Muslim

“போதைப்­பொருள் பாவ­னையில் முஸ்லிம்களே அதிகளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்” – விதுர விக்­கி­ர­ம­நா­யக்க!

Contributors

நாட்டில் போதைப்­பொருள் பாவ­னையில் முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்­த­வர்­கள் கணி­ச­மா­க பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள்.போதைப் பொரு­ளி­லி­ருந்து முஸ்லிம் இளை­ஞர்­களை மீட்­டெ­டுப்­ப­தற்கு பள்­ளி­வா­சல்கள் ஒத்­து­ழைக்க வேண்டும். நாடெங்­கு­முள்ள பள்­ளி­வா­சல்­களில் போதைப்­பொருள் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்­சிகள் ஏற்­பாடு செய்­யப்­ப­ட­வேண்டும் என புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தன்னைச் சந்­தித்த அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்­பிடம் வேண்­டுகோள் விடுத்தார்.

அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு கடந்­த­வாரம் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­கவை அமைச்சின் அலு­வ­ல­கத்தில் சந்­தித்து முஸ்லிம் சமூ­கத்தின் சம­கால விவ­கா­ரங்கள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­யது. சந்­திப்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. யின் தேசிய தலைவர் இஹ்ஸான் ஏ.ஹமீட், வை.டப்­ளியு. எம்.ஏ.யின் தலைவி பவாசா தாஹா, வை.எம்.எம்.ஏ. யின் முன்னாள் தலைவர் சஹீட் எம்.ரிஸ்மி மற்றும் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் ஆகி­யோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

சந்­திப்­பின்­போது அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்க தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில்; ‘நாட்டில் போதைப்­பொ­ருளை ஒழிப்­ப­தற்கு அனைத்து மதஸ்­த­லங்­களும் ஒத்­து­ழைப்பு நல்க வேண்டும். பள்­ளி­வா­சல்கள் மாத்­தி­ர­மல்ல பெரும்­பான்மை சமூக இளை­ஞர்­க­ளுக்கு பன்­ச­லை­க­ளிலும், தமிழ் சமூக இளை­ஞர்­க­ளுக்கு கோயில்­க­ளிலும் விழிப்­பு­ணர்வு ஊட்­டப்­ப­ட­வேண்டும். பள்­ளி­வா­சல்கள் மூலமே முஸ்லிம் இளை­ஞர்­களை நேர்­வ­ழிப்­ப­டுத்த முடியும். இந்த செயற்­திட்­டத்­திற்கு முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் வை.எம்.எம்.ஏ.போன்ற அமைப்­புகள் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

குர்ஆன் மத்­ர­ஸாக்கள் மற்றும் அர­புக்­கல்­லூ­ரி­களின் பாடத்­திட்­டங்கள், இஸ்­லா­மிய பாட­நூல்­களில் திருத்­தங்கள், இஸ்­லா­மிய நூல்கள், குர்ஆன் இறக்­கு­மதி தொடர்­பிலும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இவ்­வி­வ­கா­ரங்கள் தொடர்பில் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. அமைப்பு கடந்த காலங்­களில் முன்­னெ­டுத்த செயற்­பா­டுகள் தொடர்­பி­லான ஆவ­ணங்கள் அமைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

நாடெங்கும் 25 மாவட்­டங்­களில் 169 வை.எம்.எம்.ஏ. கிளைகள் இயங்கி வரு­வ­தா­கவும் இந்த வலை­ய­மைப்பின் ஊடாக பள்­ளி­வா­சல்­க­ளுடன் இணைந்து போதைப்­பொ­ரு­ளி­லி­ருந்து இளை­ஞர்­களைப் பாது­காப்­ப­தற்கு வை.எம்.எம்.ஏ. ஒத்­து­ழைக்க தயா­ராக உள்­ள­தா­கவும் வை.எம்.எம்.ஏ.யின் முன்னாள் தலைவர் அமைச்­ச­ரிடம் தெரி­வித்தார். இது தொடர்­பாக செயற்­றிட்­ட­மொன்­றினைத் தயா­ரித்து இவ்­வ­ருட இறு­திக்குள் அமைச்­ச­ரிடம் கைய­ளிப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

இதே­வேளை, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை ஐ.நாவின் உல­களா­விய நிதி­யத்தின் (Global Fund) உத­வியின் கீழ் கண்டி மாவட்­டத்தில் போதைப்­பொருள் ஒழிப்பு மற்றும் எயிட்ஸ் நோய் தொடர்­பான விழிப்­பூட்­டல்­களை மக்கள் மத்­தியில் வழங்கி வரு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

கண்டி வைத்­தி­ய­சா­லையில் இக்­கா­ரி­யா­லயம் இயங்­கி­வ­ரு­கி­றது. இக்­கா­ரி­யா­ல­யத்தின் கீழ் இப்­ப­ணியில் 25பேர் ஈடு­பட்­டுள்­ளார்கள். இவர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு ஐ.நா.வின் உல­க­ளா­விய நிதி­யத்தின் மூலம் வழங்­கப்­ப­டு­கி­றது. குறிப்­பிட்ட 25 பேரில் 20பேர் போதைப்­பொருள் பாவ­னை­யி­லி­ருந்தும் மீட்­டெ­டுக்­கப்­பட்­ட­வர்­க­ளாவர். இக்குழு போதைப்பொருள் பாவனையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து அவர்களை நேர்வழிப்படுத்துகிறது. போதைப்பொருள் பாவனையிலிருந்தும் மீட்டெடுக்க முடியாதவர்கள் அரசின் புனருத்தாபன முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் என்றும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.

விடிவெள்ளி 

Web Design by Srilanka Muslims Web Team