பொதுத்தராதர சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெறவேண்டும். - Sri Lanka Muslim

பொதுத்தராதர சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றினை பெறவேண்டும்.

Contributors

– இர்ஷாத் றஹ்மத்துல்லா –
நாளை ஆரம்பமாகும் கல்வி பொதுத்தராதர சாதாரணப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் சிறந்த பெறுபேருகளை பெற்று மாவட்டதுக்கு பெருமை சேர்க்க தமது ஆசிகளை தெரிவிப்பதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்இகைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை என்பது மாணவர்களின் அடுத்து அடைவு மட்டத்தை மதிப்பிடும் மீகவும் முக்கியமானதொரு பரீட்சை என்பதை மாணவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு பரீட்சையினை எதிர் கொள்ள வேண்டும்.உயர் கல்வி கற்பதற்கு தேவையான அடிப்படை தராதரத்தை பெரும் இந்த பரீட்சையின் பெறுபேருகளை எதிர்காலத்தை தீர்மாணிக்கும் ஒன்றாக அமையும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளாவிய ரீதியில் மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் வடக்கிலும் மாணவர்கள் இப்பரீட்சையினை எழுதுகின்றனர்.

கடந்த காலங்களை போலல்லாது மாணவ சமூகம் வடக்கில் அதி கூடிய பரீட்சை பெறுபேருகளை பெற்றுஇஉயர் கல்வி கற்பதற்கும்இஎமது மாவட்டத்தின் கல்வி மே்பாட்டுக்கும் ஆக்க பூர்வமான பங்களிப்பினை மாணவர்கள் இப்பரீட்சை பெறுபேற்றின் முடிவு மூலம் நிருபிப்பார்கள் என தான் நம்புவதாகவும்இபரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் நல்லபெறுபேற்றினை அடைந்து கொள்ள தான் பிரார்த்திப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team