பொதுநலவாய நாடுகள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – ஜோன் கீ! - Sri Lanka Muslim

பொதுநலவாய நாடுகள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது – ஜோன் கீ!

Contributors

(gtn)

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை நிராகரிப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது என நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை நிலைமைளைக் காரணம் காட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமர்வுகளில் பங்கேற்பதனை தவிர்ப்பது நியாயமாகாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு ஓர் பொது நிகழ்வு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு நாட்டின் மனித உரிமை விவகாரம் அல்லது வேறும் விடயத்திற்காக அமர்வுகள் அல்லது நிகழ்வுகளில் பங்கேற்காமல் விடுவது பொருத்தமாகாது என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கருதினால் கிழக்கு ஆசிய மாநாடுகள், எபேக் மாநாடுகள் பலவற்றில் பல நாடுகள் பங்கேற்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்று மனித உரிமை நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியும் எனவும், மாறாக அமர்வுகளை புறக்கணிப்பது பொருத்தமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Web Design by Srilanka Muslims Web Team