பொதுநலவாய மாநாடு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள குறுந்தகவல் செய்தி சேவை ஆரம்பம்! - Sri Lanka Muslim

பொதுநலவாய மாநாடு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள குறுந்தகவல் செய்தி சேவை ஆரம்பம்!

Contributors

பொதுநலவாய மாநாடு தொடர்பாக நாடுமுழுவதிலும் நடை முறைப்படுத்தப்படும் செயல்திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு தகவல்களை உடனுக்குடன் குறுந்தகவல் மூலம் அனுப்பும் சேவையை அரசாங்க தகவல் திணைக்களம் ஆரம் பித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்தார்.

மொபிடெல் தொலைபேசி மற்றும் டயலொக் ஆகிய சேவைகளினூடாக இந்த குறுந்தகவல் சேவையை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.

மேலும் மொபிடெல் இணைப்பாளர்களாயின் REG (space)DGI என்று டைப் செய்து 2299 என்ற இலக்கத்துக்கு அனுப்பி இந்த குறுந்தகவல் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் அதே போன்று டயலொக் இணைப்பாளர்களாயின் INFO என்று டைப் செய்து 678 என்ற இலக்கத்துக்கு அனுப்பி இந்த குறுந்தகவல் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்தார்

Web Design by Srilanka Muslims Web Team