பொதுநலவாய மாநாடு!- 19 நாடுகளின் அரச தலைவர்கள்பங்கேற்பது குறித்து இதுவரையில் உறுதிபடக் குறிப்பிடவில்லை? - Sri Lanka Muslim

பொதுநலவாய மாநாடு!- 19 நாடுகளின் அரச தலைவர்கள்பங்கேற்பது குறித்து இதுவரையில் உறுதிபடக் குறிப்பிடவில்லை?

Contributors

எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க 33 நாடுகளின் அரச தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதனை உறுதி செய்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 15ம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதாக 33 நாடுகளின் தலைவர்கள் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.

மாநாட்டை புறக்கணிக்கப் போவதாக கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

30 சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள், 10 வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள், சனல் 4 ஊடக நிறுவனம், 10 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் புலம்பெயர் புலி ஆதரவு தமிழர்கள் போன்ற தரப்பினர் மாநாட்டை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இந்தியா உள்ளிட்ட சுமார் 19 நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்பது குறித்து இதுவரையில் உறுதிபடக் குறிப்பிடவில்லை.

Web Design by Srilanka Muslims Web Team