பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது சந்தேகம்? -ஹிந்துஸ்தான் டைம்ஸ் - Sri Lanka Muslim

பொதுநலவாய மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பது சந்தேகம்? -ஹிந்துஸ்தான் டைம்ஸ்

Contributors

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பது சந்தேகம் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை கருத்திற் கொண்டு பிரதமர் இந்தத் தீர்மானத்தை எடுக்க வேண்டியேற்படும் என தெரிவித்துள்ளது.

தமிழக கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்வது நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியமானது, இவ்வாறு கூட்டணி வைத்துக்கொள்ள இலங்கை விஜயத்தை தவிர்க்க நேரிடும். தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா மட்டுமன்றி, திராவிட முன்னேற்றக்கழக தலைவர் கருணாநிதி மற்றும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களும் இலங்கை பயணத்தை கைவிடுமாறு மன்மோகன் சிங்கிடம் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இந்திய மத்திய அமைச்சில் அங்கம் வகிக்கும் ஜீ.கே. வாசன், மற்றும் வி. நாராயணசாமி ஆகியோரும் மன்மோகன் சிங் இலங்கைக்கு செல்லக்கூடாது என்று வலியுறுத்தி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team