பொதுநலவாய மாநாட்டு கார்கள் அமைச்சர்களுக்கு - Sri Lanka Muslim

பொதுநலவாய மாநாட்டு கார்கள் அமைச்சர்களுக்கு

Contributors

பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்காக கொள்வனவு செய்யப்பட்ட அதி சொகுசு கார்கள், உள்நாட்டு அமைச்சர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பல கோடி ரூபாய் செலவில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இலங்கை வந்த அரச தலைவர்களின் பாவனைக்காக இந்த வாகனங்கள் இறங்குமதி செய்யப்பட்டிருந்தன.

அவை வாடகைக்கே கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் முன்னர் அறிவித்திருந்தது.

எனினும் தற்போது அந்த வாகனங்களை உள்நாட்டு அமைச்சர்கள் பயன்படுத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.(tti)

Web Design by Srilanka Muslims Web Team