பொதுநலவாய மாநாட்டை ஜனாதிபதி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்: ஹக்கீம் - Sri Lanka Muslim

பொதுநலவாய மாநாட்டை ஜனாதிபதி வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார்: ஹக்கீம்

Contributors

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பி்ரேமச்சந்திரன் வரவு செலவுத்திட்டத்தை விமர்சித்ததைப் போன்று பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்களது உச்சி மாநாட்டையும் விமர்சித்தார். எப்படியிருப்பினும் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டை ஜனாதிபதி மிகவும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார் என நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
அமைச்சர் ஹக்கீம் மேலும் கூறுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த வரையில் அது அரசாங்கத்தின் பங்காளியாக செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் அரசாங்கத்தின் வெற்றியில் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது.
தேசிய பிரச்சினை தொடர்பில் இங்கு பேச வேண்டியுள்ளது. அத்துடன் அரசாங்கத்திடம் ஒரு கோரிக்கை ஒன்றையும் முன்வைக்க வேண்டியுள்ளது. தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவும் ஸ்தாபிக்கப்பட்டது. இதில் மக்களின் ஆணைகளை பெற்றுக்கொண்டுள்ள சில அரசியல் கட்சிகள் இணைந்து கொள்ளவில்லை. பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர்கள்களும் இணைந்து கொள்ளாத நிலையில் இதிலுள்ள பிணக்குகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது. அதே போன்று தெரிவுக்குழுவில் இணைந்து கொண்டிராத தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதில் இணைந்து கொள்ள வேண்டும் என்று நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.vidivelli

Web Design by Srilanka Muslims Web Team