பொதுநலவாய விளையாட்டு போட்டி தீ சுடர் இலங்கையை வந்தடைந்தது - Sri Lanka Muslim

பொதுநலவாய விளையாட்டு போட்டி தீ சுடர் இலங்கையை வந்தடைந்தது

Contributors

2014 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கான சுடர் இன்று நாட்டை வந்தடைந்தது.

உலகம் முழுதும் 248 நாட்களில், 78 நாடுகளுக்கு பயணிக்கவுள்ள சுடரின் பயணம் கடந்த 28ஆம் திகதி இங்கிலாந்தின் பெக்கிங்ஹம் மாளிகையில் ஆரம்பமானது.

நாளைய தினம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் 9ஆம் மேடையிலிருந்து விசேட ரயில் மூலமாக வரலாற்று புகழ்மிக்க கண்டி நகருக்கு பொதுநலவாய விளையாட்டு போட்டிகளுக்கான சுடர் பயணிக்கவுள்ளது.

இதனிடையே வெயாங்கொடை, பொல்கஹவெல, ரம்புக்கனை, பின்னவல மற்றும் கடுகண்னாவை ரயில் நிலையங்களில் விசேட நிகழ்வுகளுக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Web Design by Srilanka Muslims Web Team