பொதுபல சேனா அமைப்பிடம் ஐக்கிய தேசியக் கட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.

Read Time:1 Minute, 3 Second

பொதுபல சேனா அமைப்பிடம் ஐக்கிய தேசியக் கட்சி மன்னிப்புக் கோரியுள்ளது.

அண்மையில் சிறிகொத்த முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுபல சேனா அமைப்பு இன்று (19) சிறிகொத்தவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவும் மாகாண சபை உறுப்பினர் தயா கமகேவும் பொதுபல சேனா பிரதிநிதிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ளனர். இதனை ரவி கருணாநாயக்க உறுதி செய்துள்ளார்.tc

Previous post தற்போதைய வெளியுறவுக் கொள்கை குறித்து கருத்து வெளியிட முடியாது
Next post நிந்தவூரில் மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான புகைப்படங்கள் (3ம் இணைப்பு)