பொது மைதானம் கோரி பொத்துவிலில் பேரணி! - Sri Lanka Muslim
Contributors

40 இற்கு மேற்பட்ட விளையாட்டு கழகங்கள், 35 இற்கு மேற்பட்ட இளைஞர் கழகங்கள் அத்துடன் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களை கொண்ட பொத்துவில் பிரதேசத்தில், இதுவரையில் பொதுமைதானம் இன்மையால், பொத்துவில் சுயாதீன இளைஞர்கள் மற்றும் விளையாட்டு கழகங்கள் இணைந்து,  பொது மைதானம் கோரி, இன்றைய தினம் (14)பேரணி ஒன்றை முன்னெடுத்தனர்.

இன்று காலை முன்னெடுக்கப்பட்ட குறித்த பேரணி, பிரதான வீதியின் ஊடாக பொத்துவில் பிரதேச செயலகம் வரை சென்றது. பின்னர், பிரதேச செயலாளரிடம் சுயாதீன இளைஞர்கள் மகஜர் ஒன்றினை ஒப்படைத்தனர்.

மேற்படி பொது மைதானத்திற்கான காணி கடந்த காலங்களில் பொத்துவில் – அக்கறைப்பற்று பிரதான வீதியில் அருகாமையில் இருந்தது. எனவே, குறித்த இடத்தினை பொதுமைதானத்திற்காக கோரி குறித்த பேரணி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மூவின மக்களுடன் தேசிய சர்வதேச வீரர்கள், விளையாட்டு வீரர்கள், விளையாட்டு இளைஞர் கழகங்கள், விளையாட்டு நடுவர், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

குறித்த விடயம் தொடர்பாக, துரிதமாக செயற்படுவதாக பிரதேச செயலாளர் பேரணியில் கலந்துகொண்டவர்களிடம் தெரிவித்தாக, சுயாதீன இளைஞர் பொருப்பாளர் சட்டத்தரனி A.சாதிரிடம் தெரிவித்தார்.

B.Basoorkhan Jp

Web Design by Srilanka Muslims Web Team