பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றார் ஏ.எல்.எம்.அஸ்லம்! - Sri Lanka Muslim

பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றார் ஏ.எல்.எம்.அஸ்லம்!

Contributors

இலங்கை திட்டமிடல் சேவையின் சிரேஸ்ட அதிகாரியான ஏ.எல்.முஹம்மட் அஸ்லம் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுக் கொண்டார்.

இவருக்கான கலாநிதி பட்டத்தை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின்போது பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் லமாவன்ஸ வழங்கி வைத்தார்.

பேராதனை பல்கலைக்கழகத்தில் பொருளியலில் தத்துவ முதுமாணிப் பட்டத்தை பெற்றுக் கொண்ட இவர் தென்கிழக்கு பல்கலைக்கழக வரலாற்றில் பொருளியல் துறையில் முதன்முதலாக முதலாம் வகுப்பு சித்தி பெற்றவராவார்.

தற்போது சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் திட்டமிடல் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் இவர் மாத்திரமே தற்போது சேவையில் உள்ள திட்டமிடல் சேவை உத்தியோகத்தர்களுள் கலாநிதி பட்டத்தை பெற்ற ஒருவராவார்.

சர்வதேச ரீதியில் வெளியாகும் பல்வேறு பொருளியல் சஞ்சிகைகளில் இவரது ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

சாய்ந்தமருதுவைச் சேர்ந்த மர்ஹும்களான ஆசிரியர் எம்.அகமட்லெப்பை- நூறுல் மசாஹிறா ஆகியோரின் கனிஷ்ட புதல்வரான இவர் அட்டாளைச்சேனையில் திருமணம் முடித்தவராவார்.

இவர் ஆரம்ப கல்வியை சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்திலும் க.பொ.த.உயர்தரக் கல்வியை கல்முனை சாகிறா தேசிய பாடசாலையிலும் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team