பொறுப்பை பாதுகாக்க முடியாதவர்கள் இராஜினாமா செய்வது நல்லது - கம்மன்பில, விமல், வாசுவுக்கு ஜனாதிபதி பதில்..! - Sri Lanka Muslim

பொறுப்பை பாதுகாக்க முடியாதவர்கள் இராஜினாமா செய்வது நல்லது – கம்மன்பில, விமல், வாசுவுக்கு ஜனாதிபதி பதில்..!

Contributors

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாக்க முடியாத அமைச்சர்கள் இருப்பின் அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வது மிகவும் பொருத்தமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை நேற்று சந்தித்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக அரசாங்க அமைச்சர்கள் மூவரினால் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் ஜனாதிபதியிடம் வினவியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை பாதுகாப்பது அமைச்சரவை அமைச்சர்களின் பொறுப்பாகும் எனவும் அது முடியாத பட்சத்தில் அமைச்சரவையில் இருந்து விலகுவதே சிறந்தது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team