போதைப் பொருள் கடத்திய முகமது இஸ்மாயிலின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்! - Sri Lanka Muslim

போதைப் பொருள் கடத்திய முகமது இஸ்மாயிலின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றம்!

Contributors
author image

World News Editorial Team

சவுதியில் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சிரிய நாட்டவருக்கு இன்று மரண தண்டை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

 

சவுதியில் கற்பழிப்பு, கொலை, சமய நம்பிக்கைகளை எதிர்த்தல், ஆயுதங்களை உபயோகப்படுத்தி வழிப்பறி மற்றும் போதை பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க ஷரியத் சட்டம் வழிவகை செய்கிறது.

 

 இதனால் தான் அங்கு குற்றச்செயல்கள் குறைவாக நடைபெறுகிறது. சிரியாவை பூர்வீகமாக கொண்ட முகமது இஸ்மாயில் அல்-ஜம்முஸ் என்பவன் மீது போதை மருந்து கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

 

ஆம்பேட்டமைன்ஸ் என்ற போதை பொருளை அதிக அளவில் அவன் சவுதி அரேபியாவுக்கு கடத்தி வந்ததாக அரசு தரப்பு கூறியுள்ளது.

 

 இந்த குற்றச்சாட்டின் பேரில் இன்று அவன் தலை துண்டித்து கொல்லப்பட்டான். இதோடு சேர்த்து இந்த வருடம் மட்டும் அந்நாட்டில் 54 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளனர். சென்ற 2013 ஆம் 78 பேர் தலை துண்டித்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Web Design by Srilanka Muslims Web Team