போயின் 787 ட்ரீம் லைனர் ரகத்தை சேர்ந்த விமானம் முதல் முறையாக கட்டுநாயவில் தரையிறங்கியது. - Sri Lanka Muslim

போயின் 787 ட்ரீம் லைனர் ரகத்தை சேர்ந்த விமானம் முதல் முறையாக கட்டுநாயவில் தரையிறங்கியது.

Contributors

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போயின் 787 ட்ரீம் லைனர் ரகத்தை சேர்ந்த விமானம் ஒன்று முதல் முறையாக கட்டுநாயக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

போலந்து விமானசேவைக்கு சொந்தமான இந்த விசேட விமானத்தில் 250 போலந்து சுற்றுலாப் பயணிகள்  இலங்கை வந்தடைந்துள்ளனர்.

நாளுக்கு நாள் இலங்கை நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பால், இதுபோன்ற அதி நவீன விமானம்கள் இலங்கைக்கு வருகின்றமை இந்நாட்டு விமான போக்குவரத்து சேவைக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றி என்று விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

Web Design by Srilanka Muslims Web Team