போர் கப்பல்கள் பயணிப்பதற்கு தடை விதித்தது துருக்கி! - Sri Lanka Muslim

போர் கப்பல்கள் பயணிப்பதற்கு தடை விதித்தது துருக்கி!

Contributors

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை அடுத்து பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக பொஸ்பொரஸ் மற்றும் டார்டெனல்லஸ் நீரிணைகள் ஊடாக போர் கப்பல்கள் பயணிப்பதற்கு துருக்கி தடை விதித்துள்ளது.

ரஷ்ய போர் கப்பல்கள் மத்தியதரைக் கடலில் இருந்து கருங்கடலுக்கு பயணிப்பதைத் தடுக்கும் வகையில் 90 ஆண்டு பழமையான சர்வதேச ஒப்பந்தத்தை செயற்படுத்த துருக்கியிடம் உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்தே கடந்த திங்கட்கிழமை இந்தத் தடை விதிக்கப்பட்டது.

பொஸ்பொரஸ் மற்றும் டார்டெனல்லஸ் நீரிணைகள் ஏகியன், மார்மரா மற்றும் கருங்கடலை இணைப்பதோடு அதன் பிற்பகுதியில் இருந்து உக்ரைனின் தெற்கு கடலில் ரஷ்யா தனது ஊடுருவலை ஆரம்பித்துள்ளமை.

மொன்ட்ரியொக்ஸ் உடன்படிக்கையை துருக்கி செயற்படுத்தி இருப்பதோடு கருங்கடல் மற்றும் கருங்கடல் அல்லாத நாடுகள் ரஷ்ய நீர்வழியால் போர் கப்பல்களை செலுத்துவதை தவிர்க்கும்படி துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுத் கவுசொக்லு தெரிவித்துள்ளார்.

1936 ஆம் ஆண்டின் இந்த உடன்படிக்கை, போர் காலத்தில் பொஸ்பொரஸ் மற்றும் டார்டெனல்லஸ் நீரிணைகளில் போர் கப்பல்களை பயன்படுத்துவதை தடுக்க துருக்கிக்கு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team