போலிச் செய்திகள் – ஜம்இய்யத்துல் உலமா ஸைபர் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு!

Read Time:1 Minute, 51 Second

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெயரில் போலி செய்திகளை வெளியிட்டமை தொடர்பாக, ஸைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் நேற்று (26) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமா செய்த முறைப்பாடு பின்வருமாறு,

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உத்தியோகபூர்வ கடிதம் (லெட்டர் ஹெட்), உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் கௌரவத் தலைவர் அவர்களின் கையொப்பத்தை போலியாகப் பயன்படுத்தி உண்மைக்குப் புறம்பான செய்தியொன்றை அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கில் 2022.10.26 ஆம் திகதி (நேற்று) ஸைபர் குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டது.

இதில் ஜம்இய்யாவின் கௌரவத் தலைவர், செயலாளர் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சார்பாக நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ் ஷைக் எம். ரிபா ஹஸன் மற்றும் மூன்று சட்டத்தரணிகளைக் கொண்ட குழுவொன்று இம்முறைப்பாட்டை சமர்ப்பித்தனர்.

இது தொடர்பாக கூடிய விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.

 

ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Previous post டயனா தொடர்பில் நீதிமன்றத்தினால் CIDக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!
Next post உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் மனு தாக்கல்!