போலி சவூதி அரேபிய இளவரசரிடம் ஏமாந்த பெண் - Sri Lanka Muslim

போலி சவூதி அரேபிய இளவரசரிடம் ஏமாந்த பெண்

Contributors

தன்னை சவூதி அரேபிய இளவரசர்களில் ஒருவர் எனக் காட்டிக்கொண்ட சவூதி அரேபிய இளைஞர் ஒருவரை திருமணம் செய்ய விரும்பிய பெண்ணொருவர் 30 லட்சம் சவூதி ரியால்களை ( சுமார் 105 கோடி இலங்கை ரூபா) பறிகொடுத்துள்ளார்.

 

 

மேற்படி நபர் பணத்துடன் எகிப்துக்கு சென்று நடனக் கலைஞராக பணியாற்ற ஆரம்பித்துள்ளதாக அரேபிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

 

 

வளைகுடா நாடொன்றைச் சேர்ந்த மேற்படி பெண்ணிடம், தான் ஓர் இளவரசர் எனவும் தான் ஒரு வர்த்தகர் எனவும் அந்த இளைஞர் கூறினாராம். அந்த இளைஞரை திருமணம் செய்வதற்கு மேற்படி பெண் சம்மதித்தார்.

 

 

தமது திருமணத்தை பஹ்ரெய்னில் மிக விமர்சையாக நடத்துவதற்கு இருவரும் திட்டமிட்டதாக மேற்படி பெண் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

 

 

திருமணத்துக்கு சில தினங்கள் இருந்த வேளையில், தனது நிறுவனத்தில் நிதிப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் இத்திருமணத்தை நடத்த முடியாதுள்ளதாகவும் இளைஞர் தெரிவித்தாராம்.

 

 

அதையடுத்து அந்த இளைஞருக்கு உதவும் வகையில் 30 லட்சம் சவூதி றியால்களை வழங்க அப்பெண் தீர்மானித்தார். ஆனால் அப்பணத்தை பெற்றுக்கொண்டபின் இளைஞரிடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. அதையடுத்து சவூதி அரேபியாவில் இது குறித்து விசாரிப்பதற்கு பெண்ணின் குடும்பத்தினர் தீர்மானித்தனர்.

 

 

குறித்த நபர் இளவரசர் அல்ல, அவர் ஓர் ஆள்மாறாட்டக் காரர் எனவும் இது போன்று பல நாடுகளில் அவர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் பின்னர் தெரியவந்தது எனவும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

 

 

அந்த இளைஞன் எகிப்துக்கு சென்று நடனக் கலைஞராக பணியாற்றுவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் அந்நபர் சவூதி அரேபியாவில் தேடப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Web Design by Srilanka Muslims Web Team