போலி நாணத்தாள் அச்சிட்ட கணித பாட ஆசிரியர் 4வது தடவையாக கைது - Sri Lanka Muslim

போலி நாணத்தாள் அச்சிட்ட கணித பாட ஆசிரியர் 4வது தடவையாக கைது

Contributors

போலி நாணத்தாள் அச்சிட்ட கணித பாட ஆசிரியர் ஒருவர் நான்காவது தடவையாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மாலம்பே பிரதேசத்தில் இரகசிய பொலிஸார் நடத்திய தேடுதலின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி நாணத்தாள் அச்சிட்ட குற்றச்சாட்டின் பேரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தடவைகள் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

70 லட்ச ரூபா பெறுமதியான இரண்டாயிரம் ரூபா நோட்டுக்களுடன் குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திமுத்து நுவான் குமார என்ற கணித பாட பிரத்தியேக வகுப்பு ஆசிரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே மூன்று வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

பொலிஸார் சம்பவ இடத்தை சுற்றி வளைத்தவுடன் தப்பிச் சென்றதாகவும், நீண்ட நேரம் நடத்திய தேடுதலின் பின்னர் கூரையொன்றில் மறைந்திருந்த சந்தேக நபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

29t13

Web Design by Srilanka Muslims Web Team