போலி பொலிஸ் அதிகாரியிடம் ஏமாந்த அக்கரைப்பற்று பொலிஸ் சார்ஜன்ட்! - Sri Lanka Muslim

போலி பொலிஸ் அதிகாரியிடம் ஏமாந்த அக்கரைப்பற்று பொலிஸ் சார்ஜன்ட்!

Contributors

பொலிஸ் உயர் அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திய நபரொருவர் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரிடம் தொலைபேசி ஊடாக மோசடி  செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

 

இவ்வாறு ஈசி காசு மூலம் 30 ஆயிரம் ரூபா பணத்தை அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இழந்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரியவருவதாவது;

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் புதன்கிழமை காலை 11.00 மணியளவில் அக்கரைப்பற்று நகர் மணிக்கோட்டுக் கோபுர  பகுதியில் கடமையில் நின்றிருந்தபோது அவருடைய கைத்தொலைபேசிக்கு பொலிஸ் அத்தியட்சர் பேசுவதாகவும் தான் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு பொலிஸாரை சோதனையிட வருவதாக கூறப்பட்டது.

பின்னர் அந்தப் பொலிஸ் கான்ஸ்டபிளுடன் மீண்டும் அந்த நபர் தனது மனைவியின் கார் வீதி ஒன்றில் விபத்துக்குள்ளாகி இருப்பதாகவும், அதனை கராச்சியில் திருத்தி வருவதற்கு 30 ஆயிரம் ரூபா தேவைப்படுவதாகவும், இதனை ‘ஈசிக் காசு’மூலம்  உடன் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் 30 ஆயிரம் ரூபாவை ‘ஈசிக் காசு’ மூலம் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் பொலிஸ் அத்தியட்சருக்கு பணத்தை அனுப்பியுள்ளது தொடர்பாக தெரிவிக்க குறித்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பை ஏற்படுத்தியபோது அது செயற்படாததையடுத்து சந்தேகம் ஏற்படுத்தியபோது தான் ஏமாற்றப்பட்டதனை புரிந்து கொண்டார்.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Web Design by Srilanka Muslims Web Team