மகள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 100 வருடங்கள் சிறை - Sri Lanka Muslim

மகள் துஷ்பிரயோகம்: தந்தைக்கு 100 வருடங்கள் சிறை

Contributors

தன்னுடைய 10 வயது மகளை நிர்வாணமாக படம்பிடித்து பல நாட்களாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சாரதியான தந்தையை குற்றவாளியாக இனங்கண்ட நீதவான் கடும் வேலைகளுடன் கூடிய 100 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்தார்.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி பியசீலி விக்ரமசிங்கவே மேற்கண்டவாறு இன்று திங்கட்கிழமை தண்டனை விதித்ததுடன் குற்றவாளியான தந்தைக்கு 90 ஆயிரம் ரூபா தண்டமும் ஒரு இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்குமாறு உத்தரவிட்டார்.

சந்தேகநபரான தந்தைக்கு எதிராக விதிக்கப்பட்ட 12 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் இனங்காணப்பட்டார்.

தன்னுடைய மகளுக்கு  பாதுகாப்பாக இருக்கவேண்டிய தந்தையே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி இருப்பதால் அதனை தெளிவுப்படுத்துவதற்கு சிங்களத்தில் வார்த்தைகள் இல்லை என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.tm

Web Design by Srilanka Muslims Web Team