மகிந்தவின் முடிவை ஏற்க மறுப்பு - தொடர்ந்தும் போராட அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு..! - Sri Lanka Muslim

மகிந்தவின் முடிவை ஏற்க மறுப்பு – தொடர்ந்தும் போராட அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவு..!

Contributors
author image

Editorial Team

உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தீர்மானித்துள்ளது. அதிபர் − ஆசிரியர் சம்பள முரண்பாடு தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபகச் (Mahinda Rajapaksa) தலைமையில் அலரிமாளிகையில் நேற்று முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதன்போது 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும். அடுத்த இரண்டு பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்திருந்தார். அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் கலந்துரையாடிவிட்டு முடிவை அறிவிப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

இதன்பிரகாரம் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று கொழும்பில் கூடி ஆராய்ந்து உறுதியாக தீர்வு கிடைக்கும் வரையில்  போராட்டத்தை தொடர்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Web Design by Srilanka Muslims Web Team